கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இங்கு பந்து வெளியே செல்லாமல் இருக்க அமைக்கப்பட்ட கம்பி வேலிகள் சரிந்து கிடக்கின்றன. எனவே விளையாட்டு வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியே செல்லும் பந்தை எடுத்து வர சிரமப்பட்டு வருவதால் கம்பி வேலியை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.