கோத்தகிரி காந்தி மைதானத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் கால்பந்து பயிற்சி பெறுகின்றனர். மேலும் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகளும் நடக்கின்றன. இந்த மைதானத்தில் புற்கள் வளர்ந்து திட்டுக்களாக காணப்படுவதால் வீரர்கள் விளையாடும்போது தவறி விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. எனவே புற்களுக்கு மருந்து அடித்து, காய்ந்ததும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து முறையாக பராமரிக்க வேண்டும்.