கோத்தகிரி பாண்டியன் பூங்கா பின்பகுதியில் செல்லும் நீரோடையில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் நீர் மாசுபடும் அபாயம் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறி விளைநிலங்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் புகும் நிலை உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவும், மீண்டும் அங்கு பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.