கோத்தகிரி கிளை நூலகத்தில் இருந்து கால்டக்ஸ் செல்லும் சாலையில் நடைபாதை இருந்தது. நேரு பூங்கா சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக அந்த நடைபாதை அகற்றப்பட்டது. ஆனால் அதன்பிறகு நடைபாதைய அமைக்கப்படவில்லை. கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நடைபாதை இல்லாததால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே விரைவில் நடைபாதை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் ஆவன செய்ய வேண்டும்.