கோத்தகிரி பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடுகளுக்கு திரும்ப பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவிகளை இளைஞர்கள் கிண்டல், கேலி செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் கடும் அச்சப்படுகிறார்கள். மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே மாலை நேரத்தில் அங்கு போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.