திருக்கோவிலூர் மட்டும் இன்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அரகண்டநல்லூர் வழியாக அந்திலியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலுக்கு தினசரி சென்று வருகின்றனர். இருப்பினும் அரக்கண்டநல்லூரில் அந்திலிக்கு செல்வதை குறிக்கும் வகையில் அங்கு பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் புதிதாக அந்திலிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் வழிதவறி செல்வதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.