கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள மார்கெட் நுழைவு வாயில் முன் பாதையை முழுமையாக மறைத்து சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருட்கள் இறக்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நடக்கவும், அலுவலகத்திற்கு வாகனங்கள் சென்று வரவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்கமல் தடுக்க வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்ற அறிவிப்பு பலகையை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.