கண்டாச்சிபுரம் தாலுகா அரகண்டநல்லூரில் இருந்து அந்திலி-கொல்லூர் செல்லும் சாலை அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுகுடிக்கும் பிரியர்கள் போதை தலைக்கு ஏறியதும் அபாசமாக பேசுவதும், தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் அச்சப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.