அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-15 15:02 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தென்னம்பாடி ஊராட்சி கூத்தக்குடியில் அங்கன்வாடி பள்ளி உள்ளது. இந்த அங்கன்வாடி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த அங்கன்வாடி மையமானது அங்குள்ள நாடக மேடையில் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு 1ஆண்டாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்