புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் தபால் நிலையத்தில் ஆதார் சேவை செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக அந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனால் இங்கிருந்து பொதுமக்கள் மணமேல்குடி செல்லும் நிலை ஏற்படுகிறது. அங்கு காலை முதல் மாலை வரை காத்திருந்து ஆதார் எடுத்துக்கொண்டு அல்லது திருத்தம் செய்துகொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் மீண்டும் தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.