புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து கடம்பராயன்பட்டி செல்லும் சாலையில் அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தனியார்பள்ளி என அடுத்தடுத்து பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகள் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையில் சாலையோரத்தில் பள்ளிகள் உள்ளது என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் விதமாக எச்சரிக்கை பலகை வைக்கப்படாமல் உள்ளது. இதனால் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.