புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகேயுள்ள சூரன்விடுதி, சிக்கப்பட்டி பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலமானது மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வருகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கனமழை சமயங்களில் இவ்வழியாகத்தான் காட்டாற்று தண்ணீர் பிற பகுதிகளுக்கு செல்கின்றன. இதனால் இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.