புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் இலுப்பை தோப்பு பகுதியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை துறைக்கு சொந்தமான உலர் களம் அமைந்துள்ளது. விவசாயிகள் தங்களின் நிலங்களில் விளைவித்த நெல்மணிகளை உலர வைத்து பயன் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த களம் பராமரிப்பு இன்றி கருவேல மரங்கள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.