கோத்தகிரி காந்தி மைதானத்தில் இருந்து ராம்சந்த் சதுக்கம் செல்லும் சாலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் விபத்து அபாயத்துடன் சாலையில் நடந்து செல்வதால் வாகனங்களை நடைபாதையில் நிறுத்துவதை தடுக்க வேண்டும்