கள்ளக்குறிச்சி கச்சேரிசாலை மற்றும் துருகம் சாலை ஓரத்தில் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.