சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே டவுன் வழியாக பெங்களூரு-ஒன்னாவர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலை கடந்த சில மாதங்களாக சேதம் அடைந்து இருந்தது.
தற்போது பெய்து வரும் கனமழையால் அந்த நெடுஞ்சாலையில் குண்டு, குழி விழுந்து மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இந்த நெடுஞ்சாலையை சரிசெய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?