கல்வராயன்மலை சேராப்பட்டு கிராமத்தில் உள்ள சிறுதானிய மதிப்பு கூட்டு அலகு கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் சிறுதானியங்களை மதிப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பூட்டிக்கிடக்கும் சிறுதானிய மதிப்பு கூட்டு அலகு கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.