கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் மேல்சிறுவளூர் கூட்டுரோட்டில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இதனை பயணிகள் முழுமையாக பயன்படுத்தினர். காலப்போக்கில் பயணிகள் நிழற்குடையும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. ஒருபுறம் ஆலமரமும், மற்றொருபுறம் சவுக்கு கம்பாலும் பயணிகள் நிழற்டையே மறைக்கப்பட்டுள்ளது. தற்போது பயணிகள் நிழற்குடை எங்கே இருக்கிறது, அதனை கண்டுபிடியுங்கள் என்று பயணிகள் கூறும் அளவிற்கு உள்ளது. இரவில் இந்த நிழற்குடை சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே நிழற்குடையை இடித்து விட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும்.