கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் அகர கோட்டாலம் கிராமம் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாடின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழித்து வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சேதமடைந்து காணப்படும் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.