கல்வராயன்மலை பகுதியில் குரங்குகள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இவை வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களை கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?