கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் தாவடிபட்டு ஊராட்சியில் மகளிர் கழிப்பறை கட்டிடம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.