புதுக்கோட்டை நகர மைய பகுதியில் இயங்கி வந்த அரசு ஆயுர்வேத மருந்தகம் தற்போது திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த மருத்துவமனையை சுற்றி உள்ள கணேஷ் நகர், காமராஜபுரம் போஸ் நகர், மச்சுவாடி வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.