புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கருத்தடை சிகிச்சை செய்யும் கட்டிடத்தைச் சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் பெண்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.