ஆபத்தான நிலையில் தரைப்பாலம்

Update: 2022-11-09 13:06 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள தெற்குத்தொண்டைமான் ஊரணியிலிருந்து வையாரி குளம் வழியாக செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் இடிந்து விழும் தருவாயில் சேதமடைந்து உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனையே இந்த தரைப்பாலத்தை நாள்தோறும் கடந்து செல்கின்றனர். விவசாயிகள் வயலுக்கு செல்லவும், சுடுகாட்டிற்கான முக்கிய சாலையாகவும் இது உள்ளது என்பதால் இந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்