கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியம் ஈயனூர் ஊராட்சியில் நூலகம் உள்ளது. இந்த நூலகம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளதால் வாசகர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நூலக கட்டிடமும் நாளுக்கு நாள் பாழடைந்து வருகிறது. எனவே நூலக கட்டித்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.