ரேஷன் கடையான நூலகம்

Update: 2022-10-09 18:26 GMT
தியாகதுருகம் அருகே குடியநல்லூர் ஊராட்சியில் 20 ஆண்டுகளாக ஒரு கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது. அந்த கட்டிடத்தை சரியாக பராமரிக்காததால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டது. மேலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தன. எந்த நேரத்திலும் கீழே விழுந்து உயிர் சேதம் ஏற்படும் சூழல் நிலவியது. இதனால் முன்னெச்சரிக்கையாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு, அதே ஊரில் உள்ள நூலகத்திற்கு ரேஷன் கடை மாற்றப்பட்டது. இதனால் நூலகத்தை பயன்படுத்த முடியாமலும், போட்டித்தேர்வுக்கு இளைஞர்கள் படிக்க முடியாமலும் தவிக்கிறார்கள். எனவே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்