கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் தனியாருக்கு சொந்தமான ஓட்டு கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சென்று வருகின்றனர். இந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே ஒழுகுகிறது. இதனால் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுகின்றனா். இதை தவிர்க்க அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.