கல்வராயன்மலையில் உள்ள தும்பராம்பட்டு கிராமத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் சிதிலமடைந்தது. இதையடுத்து தற்போது வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. அங்கு போதுமான இடவசதி இல்லாததால் பொதுமக்களுக்கு ஆத்தியாவாசிய பொருட்கள் கொடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.