திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முறையான பராமரிப்பின்றி தற்போது பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தூண்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஆகவே இடிந்து விழும் முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டியது அவசியம்.