கள்ளக்குறிச்சி அருகே தென் கீரனூரில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மூலம் தென் கீரனூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்து கிடப்பதால் மழை காலங்களில் ஏரிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போதிய நீரை சேமித்து வைக்க முடியவில்லை. ஆகவே ஏரியின் நீரை சேமிக்க நீர்வரத்து வாய்க்கால் அனைத்தையும் தூர்வாரிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.