மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பாக்கம் புதூர் கிராமத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் ஏதேனும் திருட்டு, குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க கண்காணிப்பு கேமராவை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.