கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேராப்பட்டில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை கட்டப்பட்டு பல மாதங்கள் ஆன பின்பும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் கட்டிடம் சேதம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் தங்களது கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க பூட்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.