திருவெண்ணெய்நல்லூர் அருகே இளந்துறைஊராட்சி வழியாக செல்லும் ராகவன் வாய்க்கால் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் மழை நீர் பெருக்கெடுத்து வரும்போது சிறு பாலத்தில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் தண்ணீர் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதை தவிர்க்க அங்கு மேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.