கல்வராயன்மலை தும்பராம்பட்டில் உள்ள அங்கன்வாடி மையகட்டிடம் பலத்த சேதம் அடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் தற்போது அந்த கட்டிடம் மிகவும் பலவீனமடைந்து காணப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.