கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் செல்லும் சாலையில் கோமுகி ஆற்றுப்பாலத்தின் அருகே குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.