விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.