புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சோதனை சாவடி அருகில் தெற்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடை, அம்மா மருந்தகம் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.