கோத்தகிரி பேரூராட்சியில் குப்பைகளை அகற்ற ஆண்டுக்கு ஒரு கடைக்கு ரூ.600 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தாசில்தார் அலுவலக சாலையோரத்தில் மக்காத குப்பைகள் சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்தாலும், முறையாக அகற்றாமல் வைக்கப்பட்டு உள்ளது. இதனால், சாக்கு மூட்டைகள் சேதமடைந்து மக்காத குப்பைகள் சிதறி கிடக்கின்றன. எனவே மக்கும் குப்பைகளை மட்டும் அகற்றாமல் மக்காத குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.