ஆலங்குளம் தாலுகா குறிப்பன்குளம் மாடசாமி கோவில் அருகில் குப்பைத்தொட்டி உள்ளது. இங்கு எப்போதும் குப்பைகள் நிரம்பி வழிந்தவாறு உள்ளது. இதனால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே கோவிலுக்கு அருகில் உள்ள குப்பைத்தொட்டியை மாற்று இடத்தில் வைக்கவும், குப்பைகளை தினமும் முறையாக அகற்றவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.