புதிய குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2023-07-23 12:27 GMT

திருவாரூரை அடுத்த கமலாபுரம் பகுதியில் சாலையோரத்தில் குப்பைத்தொட்டி ஒன்று உள்ளது. இந்த குப்பைத்தொட்டி துருபிடித்து முழுவதும் சேதமடைந்து உள்ளது. மேலும், குப்பைத்தொட்டி தலைகீழாக கிடக்கிறது. இதன்காரணமாக குப்பைத்தொட்டியை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், அந்த பகுதியில் புதிதாக குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்