குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-07-09 13:51 GMT

திருவாரூர் மருத்துவக்கல்லூரி சாலை 46-வது வார்டு சுந்தரம் நகர் 11-ம் நகரில் குப்பை தொட்டிகள் தலைகீழாக உள்ளன. இதனால் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளில் இரை தேடி கால்நடைகள் அதிகளவில் வருகிறது. அவற்றால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும்,குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்