தென்காசி மேலகரம் மின்மயானத்தின் அருகில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் குப்பைகளில் தீ வைத்து சென்று விடுவதால், அங்குள்ள மின்கம்பம் சேதமடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. அந்த வழியாக பலரும் ஆற்றங்கரைக்கும், கோவிலுக்கும் செல்கின்றனர். எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.