சுகாதார சீர்கேடு

Update: 2023-03-19 13:57 GMT

மயிலாடுதுறை பசுபதி தெரு பழங்காவேரி பாலம் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் நாய்கள், பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இவை குப்பைகளை சாலையில் இழுத்து போடுகின்றன. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்