மலைபோல் குவிந்துள்ள குப்பை

Update: 2022-12-11 18:00 GMT
சின்னசேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையோரத்தி்ல் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்