விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் முகையூர் சர்ச் தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதை அகற்றாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அந்த இடத்தின் வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிக்கை எடுப்பார்களா?