மின்விளக்கு வசதி தேவை

Update: 2026-04-26 13:26 GMT

ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மாவட்ட நீதிமன்றம் முதல் ஸ்பின்னிங் மில், விளையாட்டு மைதானம் வழியாக பைபாஸ் வரை சாலை அருகில் உள்ள மின்கம்பங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் மாலை நேரங்களில் விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். உடனடியாக மின்கம்பங்களில் விளக்கு பொருத்தி வெளிச்சம் ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்