திருவெண்ணெய்நல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமம் மாதம்பட்டு சாலை மற்றும் வடக்குத்தெருவில் மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின்கம்பம் அதன் உறுதித்தன்மையை இழுந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அந்த வழியாக செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.