கூடலூரில் இருந்து தேவர்சோலை வழியாக கேரள மாநிலம் வயநாட்டுக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதில் தேவர்சோலை பஜாரில் இருந்து 9-ம் மைல் வரை பல இடங்களில் மின்கம்பிகள் மிகவும் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்கிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வாகனங்களின் மேற்கூரைகள் மீது மின்கம்பிகள் அடிக்கடி உரசுவதால் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.