ஆபத்தான மின்கம்பிகள்

Update: 2024-09-01 17:55 GMT

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட 12-வது வார்டுக்கு உட்பட்ட கோனேரிப்பட்டி குடிநீர் பம்பு அருகே மின்கம்பி செல்கிறது. இந்த மின்கம்பி கீழே தொங்கியபடி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியாக பள்ளி வாகனங்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படும் முன் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்த மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்