கள்ளக்குறிச்சி அடுத்த காட்டனந்தலில் இருந்து புக்கிரவாரி செல்லும் சாலையில் உள்ள மின்கம்பத்தின் மேல்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் தற்போது மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பத்தை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.